செந்தில் கூட அந்த சீன்.. நடிக்க மாட்டேன்னு ரொம்ப அடம்பிடிச்ச.. அப்றம் என்ன பண்ணாங்க தெரியுமா..? மனம் திறந்த நடிகை..!

எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த உலகம் பிறந்தது எனக்காக திரைப்படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் இருவரின் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் பேசப்படுகிறது. அதற்கு மிக முக்கிய காரணம், சிகப்பு பெயிண்ட் காமெடி தான். கவுண்டமணி, தன் தங்கை கருப்பாக இருப்பதால் சிகப்பு நிற பெயிண்ட் அடித்து செந்திலுக்கு திருமணம் செய்து வைப்பார்.

   

மறுநாள், அவர் குளித்து முடித்து விட்டு வெளியே வரும்போது கருப்பாக இருப்பதை பார்த்து செந்தில் பயந்து விடுவார். அந்த நகைச்சுவை மூலம் பிரபலமான நடிகை லலிதா குமாரி. அந்த நகைச்சுவை குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அவர் தெரிவித்திருப்பதாவது, முதலில் எனக்கு கருப்பு வண்ணம் பூசி கருப்பாக காண்பிதார்கள்.

கதையை கூறியவுடன் நான் அழுதுவிட்டேன். நான் ஏற்கனவே கருப்பு. என்னை ஏன் கருப்பாக காண்பிக்கிறீர்கள்? என்று கூறியதோடு, நான் இதில் நடிக்க மாட்டேன் என்று எஸ் பி முத்துராமன் சாரிடம் கூறினேன். அவர் தான் என்னை சமாதானம் செய்து, உன்னை அழகாக காண்பிப்போம் என்று தெளிவாக எடுத்து கூறி என்னை நடிக்க வைத்தார்.

ஆனால் அந்த நகைச்சுவை தான் தற்போது வரை என்னை அடையாளப்படுத்துகிறது. நான் எங்கு சென்றாலும், சிவப்பு பெயிண்ட் அடித்து நடித்தது நீங்க தானே? என்று தான் கேட்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.