‘காதல் மன்னன்’ திலோத்தம்மா இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா?… கணவர் குழந்தைகளோடு எடுத்துக் கொண்ட அழகான குடும்ப புகைப்படம் இதோ…

தமிழில் தல அஜித்குமாருடன் ‘காதல் மன்னன்’ படத்தில் ஜோடியாக நடித்தவர் நடிகை மானு. அந்த படத்தில் வரும் ‘உன்னை பார்த்த பின்பு நான்’ பாடல் மிகவும் பிரபலமானது. அதில் ‘மணமகளாய் உன்னை பார்த்த பின்னும் சிறையெடுக்க மணம் துடிக்குதடி” என மானுவை பார்த்து உருகி பாடுவார் அஜித்.

   

அந்த படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை வென்ற நடிகை மானு அடுத்து எந்த படத்திலும் நடிக்காமல் ஆளே காணாமல் போய்விட்டார். நடிகர் அஜித் உடன் காதல் மன்னன் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை மானுவுக்கு வெறும் 16 வயது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படம் நல்ல வெற்றியைப் பெற்ற போது அடுத்தடுத்த அவருக்கு பட வாய்ப்புகள் வந்த போதும் அவர் நடிக்கவில்லை. அவர் அப்பொழுது உலகம் முழுவதும் பரதநாட்டிய டூர் சென்றதால் நடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காதல் மன்னன் திரைப்படத்திற்கு பிறகு பல வருடங்கள் கழித்து ‘என்ன சத்தம் இந்த நேரம்’ என்ற திரைப்படத்தில் மட்டும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை மானு.

தற்பொழுது நடிகை மானு திருமணத்திற்கு பிறகு சிங்கப்பூரிலேயே செட்டில் ஆகிவிட்டார்.தனது குடும்பத்துடன் அங்கே மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டுள்ளார். அவர் சிங்கப்பூரில் நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் என்றும் கூறப்படுகிறது. தற்போது நடிகை மானு தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் அழகான குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி  வருகிறது.