‘இந்த வயசுலயும் ரொம்ப fit -ஆ தான் இருக்கீங்க’…. நடிகை மாளவிகா வெளியிட்டுள்ள வீடியோ(உள்ளே)…

நடிகை மாளவிகா “உன்னை தேடி” படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும், இந்த படத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். அதன் பிறகு பட வாய்ப்புகள் அமையவில்லை என்று சொல்லலாம். மேலும், ஒரு சில கால இடைவேளைக்கு பின்னர் சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் , திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார்.

   

அதோடு, ‘கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு‘, ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்‘ போன்ற பாடல்கள் மூலம் இவரை தெரிந்தவர்கள் தான் அதிகம். இந்த பாடல்களுக்கு நடனம் ஆடியதால் மூலமாக மக்களின் மனதில் நீங்காத வண்ணம் பதிந்துவிட்டார்.

மேலும், நடிகை மாளவிகா அவ்வப்போது தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை வெளியிடும் இவர், தற்போது வீட்டில் யோகா செய்யும் படியான வீடியோ ஒன்றினை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…