திருமணத்திற்கு பின் தனது முதல் பிறந்தநாளை கொண்டாடும் நடிகை மஞ்சிமா… செம  சர்ப்ரைஸ் கொடுத்த கணவர் கார்த்திக்…  என்ன செய்தார் தெரியுமா?… வீடியோ உள்ளே…

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘கடல்’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் கௌதம் கார்த்திக். இவர் நவரச நாயகன் நடிகர் கார்த்திக்கின் மகன் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்திருந்தாலும் தன்னுடைய திறமையை கொண்டு தன்னை நிரூபிக்க போராடி வருகிறார்.

   

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. இவர் நடிப்பில் வெளியான வை ராஜா வை, ரங்கூன், இவன் தந்திரம் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து தற்பொழுது கௌதம் கார்த்திக் சிப்பாய், யுத்த சத்தம், செல்லப்பிள்ளை, பத்து தல போன்ற பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் ‘தேவராட்டம்’ திரைப்படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த மஞ்சிமா மோகன் கௌதம் கார்த்திக் காதலித்து வந்தார். இதனை அதிகாரபூர்வமாக இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தனர். இதைதொடர்ந்து நடிகர் கௌதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகனை நவம்பர் 28 ல் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது  திருமண புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலானது. சமீபத்தில் இவர்கள் இருவரும் பழனி முருகன் கோவிலுக்கு சென்று  சாமி தரிசனம் செய்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. தற்போது நடிகை மஞ்சு மோகன் தனது ப்ரீ பர்த்டே செலிப்ரேட் பண்ணி உள்ளார். இதனை அவர் தனது instagram பக்கத்தில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

மேலும் அவர் அந்த பதிவில், ‘என் பிறந்தநாளைக் கொண்டாடுவது எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பது என்னை அறிந்தவர்களுக்குத் தெரியும். இந்த அற்புதமான இடத்திற்கு இவ்வளவு அழகான பயணத்தைத் திட்டமிட்டதற்கு நன்றி’ என கூறியுள்ளார். தற்பொழுது இவர் தனது திருமணத்திற்கு பிறகு கொண்டாடும் முதல் திருமண நாள் இதுவே. இந்த வீடியோ ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Manjima Mohan (@manjimamohan)