சினிமாவிற்காக வாழ்க்கையை இழந்த மனோரமா ஆச்சி.. அப்படி என்ன நடந்தது.? பலரும் அறியாத தகவல்.!

மறைந்த பழம்பெரும் நடிகை மனோரமா நடிப்பில் பெண் சிவாஜி என்று அழைக்கப்பட்டவர். நடிப்பு மட்டுமல்லாமல் பாடல்கள் பாடுவது, நடனம் ஆடுவது, என்று பன்முக திறமை கொண்டவர். பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளார் ஏறும் அம்மா வேடங்களில் நடித்து காண்பவர்களை கலங்க வைத்திருக்கிறார்.

   

நடிகைகளில் மிக அதிக ஆண்டுகள் திரைத்துறையில் நீடித்தவர் மனோரமா ஆச்சிதான். மேலும், பல மொழிகளில் அதிக திரைப்படங்களில் நடித்த நடிகையும் அவர் தான். அவரை முன்னுதாரணமாக கொண்டு தான் பல நடிகைகள் நடித்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு வாழ்நாள் முழுவதும் சினிமாவை நம்பியே வாழ்ந்தவர்.

என்னிடம் அவரின் திருமண வாழ்க்கை நன்றாக அமையவில்லை என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். அவர் தெரிவித்திருப்பதாவது, நடிகை மனோரமாவின் கணவர் ராமநாதன். அவரும் நடிகர் தான். ஓரிரு விபரங்களில் கதாநாயகனாக நடித்தார். அதன் பிறகு, துணை கதாநாயகனாக சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு மனோரமாவை சினிமாவில் நடிக்க கூடாது என்று அவரின் கணவர் கூறியிருக்கிறார். அதற்கு மனோரமா, என்னுடைய லட்சியமே சினிமாவில் பிரபல நடிகையாக வேண்டும் என்பது தான். அதனை தடுக்கும் எதுவும் எனக்கு வேண்டாம் என்று கூறி கணவரையே உதறி தள்ளி விட்டார் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.