56 வயதிலும் கடுமையான ஒர்க் அவுட்களை செய்யும் நடிகை நதியா… இதுதான் உங்களுடைய அழகின் ரகசியமா?… வைரலாகும் வீடியோ… ஆச்சரியத்தில் ரசிகர்கள்…

90’ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நதியா. இவர் தமிழ் சினிமாவில் ‘பூவே பூச்சூடவா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ் மட்டும் அல்லாது மலையாளம், தெலுங்கு உட்பட பல மொழி படங்களில் நடித்துள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

   

இவர் நடிப்பில் வெளியான பூக்களை பறிக்காதீர்கள், மந்திரப்புன்னகை, உயிரே  உனக்காக, உனக்காகவே வாழ்கிறேன், நிலவே மலரே, சின்னத்தம்பி பெரியதம்பி, தாமிரபரணி, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் நடித்த காலகட்டத்தில் எந்த ஒரு பொருளை எடுத்தாலும் இவரின் பெயர் சொல்லும் அளவிற்கு பிரபலமானவர். நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை, நதியா கொலுசு என பிரபலமாக இருந்தார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை நதியா.

இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தற்பொழுது தான் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வதை வீடியோவாக  எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடீயோவை பார்த்த ரசிகர்கள் 56 வயதிலும் இப்படி ஒர்க் அவுட் பண்றீங்களே? இது தான் உங்கள் அழகின் ரகசியமா?’ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Nadiya Moidu (@simply.nadiya)