இரட்டை குழந்தைகளின் பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாடிய நமீதா… வெளியான அழகிய புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து தனது கவர்ச்சியால் ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் வசம் கவர்ந்தவர் தான் நடிகை நமீதா.

   

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பழமொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர்.

இவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் இன்றும் ரசிகர் மத்தியில் இவருக்கென தனி ஒரு வரவேற்பு உள்ளது.

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய இவர் தற்போது அரசியலில் களம் இறங்கி அசத்தி வருகின்றார்.

கடந்த 2017ம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு கடந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான்ராஜ் என்று தனது குழந்தைகளுக்கு நமீதா பெயர் சூட்டியுள்ளார்.

இந்நிலையில் நடிகை நமீதா தனது இரட்டை குழந்தைகளின் முதலாவது பிறந்த நாளை நேற்று கொண்டாடியுள்ளார்.

கேரளாவில் உள்ள கோவில் ஒன்றில் தனது குழந்தைகளின் முதல் பிறந்த நாளை நமீதா கொண்டாடியுள்ளார்.தங்களின் குழந்தைகளால் வாழ்வு பிரகாசமாகவும் ஒளிமயமாகவும் இருப்பதாகவும் தனது இதயம் மற்றும் இதயம் துடிப்புக்கு காரணமான என் குழந்தைகளுக்கு ஐ லவ் யூ எனக் கூறி பிறந்தநாள் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Namitha Vankawala (@namita.official)