‘சீரியலில் தான் ஹோம்லி… ஆனால் நிஜத்தில் வேற மாதிரி’… செம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்ட ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல் நடிகை… தூக்கத்தை மறந்த ரசிகர்கள்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று காற்றுக்கென்ன வேலி. இந்த சீரியல் தற்போது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது.

   

இந்த சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை பிரியங்கா.

சீரியலில் மிகவும் ஹோம்லியாக, அடக்க ஒடுக்கமாக நடிக்கும் பிரியங்கா நிஜத்தில் மிகவும் மாடலாக உடை அணியக் கூடியவர்.

நடிகை பிரியங்கா குமார் கர்நாடகாவில் இருக்கும் மைசூரில் பிறந்து வளர்ந்தவர்.

தனது பள்ளி படிப்பை மைசூரில் முடித்தார். மாடலிங் துறையின் மீது கொண்ட ஆசை காரணமாக தொடர்ந்து மாடலிங் செய்து வந்தார்.

இவர் முதன்முதலில் கன்னட சீரியலில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து தமிழில் ‘சாக்லேட்’ என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். 2022 இல் கன்னட மொழியில் வெளியான ‘பேட்மேனர்ஸ்’ என்ற படத்திலும் பிரியங்கா நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகை பிரியங்கா குமார். அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.

தற்பொழுது இவர் பகிர்ந்துள்ள ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.