தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில், வடிவேலு, சந்தானம், யோகி பாபு, சதீஸ், பால சரவணன், லொள்ளு சபா, சுவாமிநாதன் என இன்னும் ஏராளமான காமெடி நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் வெள்ளித்திரையில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கும் பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படி வடிவேலுவுடன் இணைந்து காமெடியில் கலக்கியவர் தான் பிரியங்கா.
திருமணத்திற்கு பின் சினிமாவிற்கு புறப்பட்டு இருந்த பிரியங்கா தற்பொழுது சீரியல்களில் பிஸியாக நடித்த வருகிறார். காமெடி நடிகை பிரியங்கா என்றால் அவ்வளவாக யாருக்கும் தெரியாது. ஆனால் இந்த காமெடியை சொன்னால் அனைவருக்கும் தெரியும். ‘ஏட்டையா ஃப்ரீயா இருந்தீங்கன்னா அப்படியே விட்டு பக்கம் வாங்க’. அதாங்க அஞ்சு புருஷன் காமெடி.
இந்த படத்தில் மட்டுமல்ல வடிவேல் உடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த அனைத்து காமெடி கட்சியும் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாது. சினிமாவில் காமெடி நடிகையாக நடித்திருந்தாலும் சின்ன திரையில் பயங்கரமான வில்லியாக வலம் வந்து கொண்டுள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கன்னத்தில் முத்தமிட்டால் சீரியலில் படு மோசமான வில்லியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் பிரபல சேனல் ஒன்றிற்க்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் ‘யூத் படத்தில் நடிகர் விஜய்க்கு அக்காவாக நடித்துள்ளேன்’ என்றும், மேலும் பல திரைப்படங்களில் நடித்த அனுபவங்களை பற்றி கலகலப்பாக மனம் திறந்து கூறியுள்ளார். இதோ அந்த வைரல் வீடியோ…
View this post on Instagram