அடேங்கப்பா… பயங்கர வரவேற்பு… கெத்தாக ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்திறங்கிய தங்க சிலை…!

80 மற்றும் 90களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து தமிழ் திரையுலகையே கலக்கி கொண்டிருந்தவர் தான் நடிகை ராதா. ஆனால் அவரின் மகள்கள் இருவரும் அவர் அளவிற்கு திரைத்துறையில் ஜொலிக்கவில்லை. அதில் முதல் மகளான கார்த்திகா நாயர், நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கோ திரைப்படத்தில் அறிமுகமானார்.

   

அதனைத்தொடர்ந்து, அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை போன்ற சில திரைப்படங்களில் நடித்தார். எனினும், அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், கார்த்திகா தன் நண்பரும், காதலருமான ரோஹித் மேனன் என்பவரை நேற்று திருமணம் செய்துகொண்டார்.

வெகு விமரிசையாக நடந்த இவர்களின் திருமணத்தில் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், கார்த்திகா நாயர் திருமண கோலத்தில், ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்து கெத்தாக இறங்கிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது.