அந்த கருப்பன் கூட நடிக்கமாட்டேன்.. கேப்டனை அவமானப்படுத்திட்டு.. ஒரே வருசத்துல 3 படத்தில் அவருடன் ஜோடி போட்ட நடிகை.. யார் தெரியுமா.?

மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் திரைத்துறையில் சக நடிகர் நடிகைகளுக்கு பல உதவிகளை செய்துள்ளார். பிறரை வாழவைத்து அதில் மகிழ்ச்சி அடைந்த சிறந்த மனிதர் விஜயகாந்த். தன்னால் யாரும் நஷ்டம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக தன் சம்பளத்தை கூட பல திரைப்படங்களில் விட்டுக் கொடுத்திருக்கிறார்.

   

பல இளம் கதாநாயகர்களை வளர்த்து விடுவதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார். ஆனால் திரை துறையில், அவர் வளர்ந்து வந்த காலகட்டத்தில் பல நடிகைகள், கருப்பாக இருப்பதாக அவருடன்  நடிக்க மறுத்திருக்கிறார்கள். அப்படி நடந்த ஒரு சம்பவம் குறித்து பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது, கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடிப்பில் கடந்த 1986 ஆம் வருடத்தில் வெளிவந்த அன்னை என் தெய்வம் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகை ராதிகாவை அணுகியுள்ளனர். ஆனால், அவர் இந்த கருப்பனோடு நான் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.

ஆனால் அதற்கு அடுத்த வருடமே பூந்தோட்ட காவல்காரன், நீதியின் மறுபக்கம், சிறைப்பறவை ஆகிய மூன்று திரைப்படங்களில் அவருடன் இணைந்து நடித்திருக்கிறார். கருப்பாக இருக்கிறார் என்று கூறி யாரோடு நடிக்க மறுத்தாரோ, அவருடனே அடுத்த வருடத்திலேயே மூன்று திரைப்படங்களில் நடிக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டுவிட்டது. அந்தப் படங்கள் அதிக அளவில் வெற்றியும் பெற்றது என்று கூறியிருக்கிறார்.