சமீப காலமாகவே சமூக வலைத்தளங்களில் பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது நடிகை ராதிகா தனது அப்பாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட அழகிய சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் மறக்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ராதிகா. இவர் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். 80 மற்றும் 90களில் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தனது சிறந்த நடிப்புக்காக ஃபிலிம் பார் மற்றும் தமிழகத்தின் மாநில விருதுகளையும் வென்றுள்ளார்.
வெள்ளித்திரையில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது சின்னத்திரையிலும் கால் பதித்தார். சித்தி, செல்வி, அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி ,சித்தி 2 என பல பிரபல சீரியல்களில் நடித்து மக்கள் மனதை கொள்ளையடித்தார். பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகள்தான் நடிகை ராதிகா. வாரிசு நடிகையாக இவர் திரையுலகில் நுழைந்து இருந்தாலும், தனது திறமையின் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.
நடிகை ராதிகா நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரேயான் என்ற ஒரு மகள் மற்றும் ஒரு மகனும் உள்ளார். நடிகர் சரத்குமாருக்கு தனது முதல் மனைவியின் மூலம் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தற்பொழுது நடிகை ராதிகாவின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.