வீகெண்டை தன் குடும்பத்துடன் ஜாலியாக என்ஜாய் செய்யும் நடிகை ராதிகா சரத்குமார்… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

80s மற்றும்  90களில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ராதிகா. இவர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர்.

   

இவர் தந்தை பிரபல நடிகர் எம் ஆர் ராதா, தாய் கீதா. இவர் இலங்கை மற்றும் இங்கிலாந்து நாட்டில் படித்தார்.நடிகை ராதிகா 1978 ஆம் ஆண்டு வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற திரைப்படத்தன் மூலமாக தமிழ் திரையு.லகில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,  கன்னடம்,  இந்தி மற்றும் மலையாள படங்களில்  நடித்துள்ளார்.இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது.

இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி,  கமல்ஹாசன்,  விஜயகாந்த் போன்ற பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார்.

தற்போது ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் சின்ன திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பை தாண்டி ராடான் நிறுவனம் என்பதை தொடங்கி ஹிட்டான தொடர்களை தயாரித்து வருகிறார்.

நடிகை ராதிகா பிரதாப் போத்தன் என்பவரை 1985 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  பிறகு இருவரின் கருத்து வேறுபாட்டின் காரணமாக 1986 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

அதன் பிறகு நடிகை ராதிகா ரிச்சர்ட் ஹார்ட் என்பவரை 1990இல் திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ரேயன் என்ற ஒரு மகளும் உள்ளார்.அதன் பிறகு இருவரின் கருத்து வேறுபாட்டின் காரணமாக 1992 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

தனது மகளை நடிகை ராதிகா கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார். தொடர்ந்து தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்களை ராதிகா அடிக்கடி வெளியிட்டு வருவார்.

அது மட்டுமில்லாமல் தனது பேரன் பேத்தியுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் ராதிகாவின் மகள் ரேயான் சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

தனது குழந்தைகள் மற்றும் அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். தற்போது இந்த புகைப்படங்களானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.