‘தாஸ்’ பட நடிகை ரேணுகா மேனனின் கணவர் மற்றும் குழந்தைகளா?… என்ன ஒரு அழகான குடும்ப புகைப்படம்….

தமிழ் திரை உலகில் பிரபல நடிகைகளில்  ஒருவர் தான் ரேணுகா மேனன். இவர் கேரள மாநிலத்தைச் சார்ந்தவர்.

   

இவர் தமிழ் சினிமாவில் குடும்பப் பாங்கான  கதாபாத்திரத்தில்  நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார்.

இவர் முதலில் ‘நம்மள்’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானார்.

இவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ‘தாஸ்’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து  தமிழில் பிப்ரவரி 14,கலாபக் காதல் போன்ற  படங்கள் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு ,கன்னடம் போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவரின் வெகுளியான நடிப்பால்  மக்கள் மத்தியில் இவரின் நடிப்பு பேசப்பட்டு வருகிறது.

நடிகைகள் என்றாலே  30வயத்துக்கு  மேல் தான் திருமணம் செய்து கொள்வார்கள் ஆனால் ரேணுகா 19 வயதிலேயே சாப்ட்வேர் இன்ஜினியரான   சூரஜ் குமார்  என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

தற்போது  அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில்  செட்டில் ஆகி உள்ளனர். சினிமாவில் தனக்கான ஒரு எதிர்காலம் இருந்தாலும் அதை விட்டு விலகி தற்போது குடும்பத்தை பார்த்து வருகிறார்.

அங்கேயே ஒரு நடன பள்ளி ஒன்று நடத்தி வருகிறார். சினிமா நடனம், பாரம்பரிய நடனம் இரண்டையும் அங்குள்ள குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து வருகிறார்.

இவருக்கு  இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.தற்போது இவர்களின் அழகிய குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது