‘ஒஸ்தி’ பட நடிகை ரிச்சா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?… அம்மாடி… இவ்ளோ குண்டா?…

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மயக்கம் என்ன’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். இப்படத்தை தொடர்ந்து சிம்புவுடன் இவர் நடித்த ‘ஒஸ்தி’ படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதன் பின்னர் பெரிதாக படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார் நடிகை ரிச்சா.

   

இவ்வாறு சில நாட்கள் சினிமா பயணங்களிலும் காதல் வாழ்க்கையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் ரிச்சா. மேலும் ரிச்சா சினிமா துறையை தவிர வேறு தொழில் துறையிலும் ஈடுபாடு காட்டி வந்தார். சினிமாவில் பிரபலமாக இருக்கும் பொழுது இவர் தனது காதலர் ஜோ லங்கேலாவை 2019ல் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. 2021ல் இத்தம்பதிக்கு லூகா என்ற ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தற்பொழுது தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் நடிகை ரிச்சா. இந்நிலையில் இன்று நடிகை ரிச்சா தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இதை தொடர்ந்து இவரின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘ஒஸ்தி பட நடிகையா இவர்? இவ்வளவு குண்டாயிட்டாங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…