2006 ஆம் ஆண்டு வெளியான ‘மனதோடு மழைக்காலம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தாலும் 2009 ஆம் ஆண்டு வெளியான பேராண்மை படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாய் தன்ஷிகா. அதன்பிறகு முன்னணி நாயகியாக வலம் வருவதற்காக கவர்ச்சி வேடத்தில் நடிக்க துணிந்தார். மாஞ்சா வேலு படத்தில் பிகினி போட்டு கூட நடனமாடிக் காட்டினார்.
இருந்தாலும் அவ்வளவு ஒர்த் இல்லை என தமிழ் பட தயாரிப்பாளர்கள் ஒதுக்கிவிட்டனர். அதன்பிறகு அரவான், பரதேசி போன்ற படங்களில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பு இவர்க்கு கிடைத்தது.
பின்னர் ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்தபோது நடிகை சாய் தன்ஷிகாவின் மார்க்கெட் எகிறியது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். கபாலி திரைப்படத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்த இவர் சில வருடங்களாக படங்களில் நடிக்கவில்லை .இதை தொடர்ந்து அவரைப் பற்றிய எந்த ஒரு செய்திகளும் இணையத்தில் வெளியாகாமல் இருந்தது.
தற்பொழுது மீண்டும் இணையத்தில் ஆக்டிவாக ஆரம்பித்துள்ளார் நடிகை சாய் தன்ஷிகா. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய போட்டோ சூட் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ மூலம் தன் வெள்ளித்திரையில் மீண்டும் ரீ என்ட்ரியாக உள்ளதை ரசிகர்களுக்கு கூறியுள்ளார் நடிகை சாய் தன்ஷிகா. தற்பொழுது இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் நடிகை சாய் தன்சிகாவின் வரவை எதிர்பார்த்து ஆர்வத்தில் உள்ளனர். இதோ அந்த வைரல் வீடியோ…
https://www.instagram.com/reel/CtQgAfigO3E/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==