அடேங்கப்பா.. நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!!

முன்னணி நடிகையான சமந்தா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், சூர்யா உள்ளிட்டோருடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

   

விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யா உடன் இணைந்து சமந்தா நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து மீண்டு குஷி சாகுந்தலம் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அந்த படங்கள் வெற்றி பெறவில்லை. தற்போது நோயிலிருந்து மீண்டு வந்த சமந்தா அடுத்த படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

இன்று சமந்தா தனது 37-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சமந்தாவின் சொத்து மதிப்பு 90 லிருந்து 100 கோடி ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது. ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில் சொகுசு பங்களாக்களும், range rover, Porsche உள்ளிட்ட சொகுசு கார்களை சமந்தா சொந்தமாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.