உடல் நலக்குறைவால் நடக்கவே முடியாமல் நடந்து சென்ற நடிகை சமந்தா…. நம்ம சமந்தாவா இது?… சோகத்தில் ரசிகர்கள்…. வைரலாகும் வீடியோ இதோ…

நடிகை சமந்தா தற்பொழுது மும்பை விமான நிலையத்தில் நடந்து வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகை சமந்தா. இவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைத்னயாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அறிந்த ஒன்று. இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்பொழுது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

   

இந்நிலையில் மயோசிட்டிஸ் எனும் அரியவகை நோயினால் நடிகை சமந்தா பாதிக்கப்பட்டு அதற்காகவே வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நோயின் சிகிச்சைக்காக நடிகை சமந்தா தென்கொரியாவிற்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார் என்றும் இணையத்தில் தகவல்கள் வெளியானது.

இதை தொடர்ந்து நடிகை சமந்தாவின் உடல்நிலை குறித்து ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்திருந்தனர் . தற்பொழுது நடிகை சமந்தா சிகிச்சை முடிந்து நாடு திரும்பியுள்ளார். இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் நடிகை சமந்தா நடந்து வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் சமந்தாவின் முகத்தில் கொஞ்சம் கூட சிரிப்பு தெரியவில்லை. மிகவும் சோகமாக நடந்து வரும் நடிகை சமந்தாவை பார்த்த ரசிகர்கள் ‘நம்ம சமந்தாவா இது? என்ன ஆச்சு உங்களுக்கு?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். எனினும் அவர் தனது நோயிலிருந்து கண்டிப்பாக மீண்டும் வந்து பல ஹிட் படங்களில் கண்டிப்பாக நடிப்பார் என்று நம்பிகையுடன் உள்ளனர்.

வைரலாகும் அந்த வீடியோ இதோ…