நடிகை சரண்யா மோகனுக்கு திருமணமாகி இவ்ளோ பெரிய பசங்க இருக்காங்களா?… லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சரண்யா மோகன். இவர் திரையுலகில் ‘காதலுக்கு மரியாதை’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் தனுஷ் உடன் ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நடித்து கலக்கியுள்ளார்.இதைத் தொடர்ந்து  அவர் வினய் நடித்த ‘ஜெயம் கொண்டான்’ திரைப்படத்தில் நடித்தார்.

   

இவர் குறிப்பாக தளபதி விஜய் உடன் நடித்த ‘வேலாயுதம்’ திரைப்படத்தில் அவருக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்த நிலையில் நடிகை சரண்யா மோகன் தனது நீண்ட நாள் காதலர் ஆன டாக்டர் அரவிந்த் கிருஷ்ணன் என்பவரை 2015ல் திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு அனந்த பத்மநாபன் என்ற மகனும் அன்னபூர்ணா என்ற மகளும் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சரண்யா மோகன் தனது மகன் மற்றும் மகளுடன் இணைந்து ஒரு சில புகைப்படங்களை எடுத்து இணையதளத்தில் வெளியிடுவார்.

தற்பொழுது அவர் சில லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ‘நடிகை சரண்யா மோகனுக்கு இவ்ளோ பெரிய மகனா?’ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.