‘அன்று என்னை பார்க்க 300 பேர் மட்டும் வந்தனர்…. இன்று 1000 பேர் என்னை பார்க்கின்றனர்’… உருக்கமான பேட்டியளித்த ஷகீலா… கலங்கிய ரசிகர்கள்…

தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஷகீலா. முதலில் மற்ற நடிகைகளை போலவே சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். ஒரு சில சூழ்நிலை காரணங்களால் கிளாமர் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதைத் தொடர்ந்து கிளாமர் குயினாக வலம் வந்தார் ஷகீலா.

   

சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள். இவர் முதலில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தது மலையாள மொழி படங்களில் தான்.

அதனாலேயே இவருக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள். இவருடைய கவர்ச்சி படங்களுக்கு ரசிகர்கள் மயங்காதவர்கள் இருக்க மாட்டார். மேலும், ஷகீலா தனது வாழ்கை வரலாற்றை படமாகவும் எடுத்துள்ளார்.

மேலும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் ஷகிலா என்பவருக்கு இருந்த பிம்பத்தை முற்றிலுமாக உடைத்தெறிந்துள்ளார். இத்தனை நாட்கள் அவரை ஒரு கவர்ச்சி பொருளாக மட்டுமே பார்த்து வந்தவர்கள் கூட அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவரை ஒரு தாயாக பார்க்கும் அளவிற்கு மாறியுள்ளார் நடிகை ஷகீலா.

இந்த நிலையில் ஷகிலா அவர்கள் சமீபத்தில் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தைகட்டு ஸ்ரீ மகாதேவா கோவில் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறார்.

அதில் கலந்து கொண்டு பேசும்பொழுது “இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இங்கு சிறப்பு விருந்தினராக வந்திருப்பது கடவுளுடைய ஆசிர்வாதம் தான். நான் கடந்த முறை கேரளா வந்தபோது பல பிரச்சனைகளை சந்தித்தேன். வணிக வளாகம் ஒன்றில் நுழைய கூட என்னை அனுமதிக்கவில்லை.

ஆனால், கடவுள் எனக்காகத்தான் இந்த திட்டங்களை செய்திருக்கிறார் என்று நான் இப்போது உணர்கிறேன். வணிக வளாகத்தில் என்னை பார்க்க 300 பேர் மட்டும் தான் வந்திருந்தனர். ஆனால், இப்போது என்னை ஆயிரம் பேருக்கு மேல் பார்க்கிறார்கள். இது எல்லாம் சிவனுடைய திட்டம்” என்று மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.