தன் குட்டி தேவதையுடன் இணைந்து கியூட் வீடியோ வெளியிட்ட ‘ரோஜா’ சீரியல் நடிகை… மெய் மறந்து பார்க்கும் ரசிகர்கள்…

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்ன  மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான சீரியல் ‘ரோஜா’ இந்த சீரியலை இயக்குனர் வா. சதாசிவம் அவர்கள் இயக்கியுள்ளார்.  இந்த சீரியலில் பிரியங்கா நல்கார்,  சிப்பு சூரியன், ஷாமிலி சுகுமார், வடிவுக்கரசி, லதா,  சிவா, வெங்கட் ரங்கநாதன் போன்ற பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்துள்ளனர்.

   

இந்த சீரியலில் பிரியா  என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை ஷாமிலி சுகுமார். நடிகை ஷாமிலிக்கு, காமெடி, டான்ஸிங், சிங்கிங் என பிடித்தவைகள் ஏராளம் இவர் முதலில்  சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்று ‘தென்றல்’. இந்த சீரியலில்  வில்லியாக நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார் .

இதை தொடர்ந்து நடிகை ஷாமிலி  சன் டிவியில் ஒளிபரப்பான பைரவி,வாணி ராணி,பிரியமானவன்,வள்ளி உள்ளிட்ட பல வெற்றி தொடர்களில் நடித்து தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார் ஷாமிலி. அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார் ஷாமிலி. இவர் சின்னத்திரை சீரியல்  மட்டும்மல்லாமல்   வெள்ளித்திரையிலும் நடித்துள்ளார்.

நடிகை ஷாமிலி  ஜிவி பிரகாஷ்மற்றும்   ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான ‘பென்சில்’. திரைப்படத்தில் நடித்தார். நடிகை ஷாமிலி ராஜ்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. சோசியல் மீடியாவில் எப்பொழுது ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது தனது மகளுடன் இணைந்து கியூட் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by shamili???????? (@shamili_sukumar)