‘அவரு மூஞ்சிய பாரு.. அந்த ஆளு கூட எல்லாம் நடிக்க மாட்டேன்’…. பிரபல நடிகருடன் நடிக்க மறுத்த நடிகை சில்க் ஸ்மிதா… அவர் யாருன்னு தெரியுமா?…

80 களில் தொடங்கி 90 வரை தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவர் தனது 17 ஆண்டு கால சினிமாவில் தமிழ், ஹிந்தி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை சில்க் ஸ்மிதா இந்த பெயரை கேட்டாலே சொக்கிப் போவோர் ஏராளம். இதற்கு காரணம் அவரின் சொக்க வைக்கும் கண்கள், செக்கச் சிவந்த இதழ்கள், கிறங்கடிக்கும்  கவர்ச்சியே.

   

தமிழில் வினுச்சக்கரவர்த்தி அவர்களால் ‘வண்டிச்சக்கரம்’ என்ற திரைப்படத்தில் ‘சில்க்’ என்கிற சாராயக்கடையில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்தில் முதன்முதலாக நடித்தார். இதைத்தொடர்ந்து  திரையுலகின் கனவு கன்னியாக வலம் வந்த இவர் 1996 இல் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார். இவர் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் அவருடைய பெயரை கேட்டாலே ரசிகர்கள் மத்தியில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்றே கூறலாம்.

இவருடைய வாழ்க்கை வரலாறு ஹிந்தியில் ‘தி டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டது. இதுவரை எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் தமிழில் வந்து விட்டார்கள். ஆனால் யாராலும் நடிகை சில்க் ஸ்மிதாவின் இடத்தைப் பிடிக்க முடியவில்லை. தற்பொழுது நடிகை சில்க் ஸ்மிதா பிரபல நடிகர் ஒருவருடன் நடிக்க மறுத்த தகவல் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

அவர் வேறு யாரும் இல்லை. நடிகர் சத்தியராஜ் தான். நடிகர் சத்யராஜ் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் ‘கனம் கோட்டார் அவர்களே’. திரைப்படத்தில் சத்யராஜ் உடன் நடிகை சில்க் ஸ்மிதாவின் நடிக்க வேண்டுமென படத்தில் இயக்குனர் கூறியிருக்கிறார். ஆனால் அதை மறுத்து சில்க்ஸ்மிதா ‘அவரது மூஞ்சி எப்படி இருக்கு பாருங்க, இவ்வளவு உயரமான ஆள் கூட என்னால் நடிக்க முடியாது’ என மறுத்திருக்கிறார்.

அதன் பின்பு இயக்குனர், சத்யராஜ் ஜமீன்தார் வீட்டு குடும்பத்து பையன், அவர் ரொம்ப நல்லவர் என சில விஷயங்களை சில்க் இடம் எடுத்துரைத்துள்ளார். அதன் பிறகு ஒரு வழியாக சத்யராஜ் உடன் நடிக்க சில்க் சம்மதித்தாராம். அதன் பிறகு சத்யராஜின் குணம் மற்றும் படப்பிடிப்பு தளத்தில் அவர் பேசும் விதம் என எல்லாமே சிலுக்குக்கு பிடித்து போய்விட்டதாம். இதனால் அடுத்தடுத்த படங்களில் சத்யராஜ் உடன் சில்க் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்துள்ளார் சில்க்.