தனது மகனுடன் கொஞ்சி கொஞ்சி விளையாடும் நடிகை சிம்ரன்… வைரலாகும் கியூட் புகைப்படங்கள் இதோ…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்தவர் நடிகை சிம்ரன். விஜய், அஜித், பிரபுதேவா என பல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். 90 களில் நடிகை சிம்ரன் மிக அதிகமான ரசிகர்களை கொண்ட கதாநாயகியாக வலம் வந்தவர். இவர்  ‘இடுப்பழகி சிம்ரன்’ என்று தனது ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.

சிறிது காலம் திரையுலகை விட்டு விலகி இருந்த இவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த’ சீமராஜா’ படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின்னர் சூப்பர் ஸ்டார் நடித்த ‘பேட்ட’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

90ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகையாக இருந்த இவர் தற்பொழுது மீண்டும் தனது இளமையை மீட்டு தற்போதைய இளம் நடிகைகளே தோற்று போகும் அளவிற்கு மிக அழகாக மாறி உள்ளார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த மகான், கேப்டன், ராக்கெட்ரி போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

தற்பொழுது அவர் அந்தகன், துருவ நட்சத்திரம், வணங்காமுடி என பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். நடிகை சிம்ரன் 2003ல் தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சிம்ரன் தனது மகனுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ‘நடிகை சிம்ரனின் மகனா இது?’ என்று ஆச்சரியத்தில் உள்ளனர்.