‘ஈரம்’ பட நடிகை சிந்து மேனனின் கணவர் மற்றும் குழந்தைகளை பாத்துருக்கீங்களா?… வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படங்கள் இதோ…  

விஜய்யுடன் யூத், ஆதி நடித்த ஈரம் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர் மலையாள நடிகை சிந்து மேனன். ‘சமுத்திரம்’ எனும் படத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். இப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இப்படத்திற்கு பிறகு இவருக்கு ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

   

அதன் பின்னர் விஜய் நடிப்பில் வெளியான ‘யூத்’ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் மீண்டும் வரவேற்பைப் பெற்றார். வெள்ளித்திரையில் நிறைய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்றாக திகழ்ந்த திரைப்படம் தான் ‘ஈரம்’. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விமர்சன ரீதியாக நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த சிந்து மேனன் அப்பொழுது ரசிகர்களால் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்பட்டு வந்தார். இப்படத்திற்குப் பிறகு இவர் எந்த படத்தில் நடிப்பார் என எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இவர் அடுத்தடுத்து எந்த படத்திலும் நடிக்காமல் சினிமா விட்டு விலகினார்.

சிந்து மேனன் தனது திருமண வாழ்க்கையில் கடந்த 2010ஆம் ஆண்டு பிரபு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு தனது கணவருடன் லண்டனில் தன் குழந்தைகளுடன் தற்போது குடும்பத்தை பார்த்து வருகிறார். தற்பொழுது இவர் தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் இருக்கும் அழகான குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.