குடும்பத்துடன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை சினேகா….. வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படங்கள் இதோ…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான மற்றும் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை சினேகா.

   

இவரை புன்னகை அரசி என்ற பெயரைக் கொண்டு தான் பலரும் அழைப்பார்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களுடனும் சேர்ந்து நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

இப்படி சினிமாவில் பிஸியான நடிகையாக இருந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு குடும்ப பொறுப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

தற்போது மீண்டும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என ரீ என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார்.

அவ்வகையில் சின்ன திரையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகின்றார்.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் சினேகா மற்றும் பிரசன்னா தம்பதி தொடர்ந்து வீட்டில் நடைபெறும் விசேஷங்கள் மற்றும் பல புகைப்படங்களை தொடர்ந்து இணையத்தில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அவ்வகையில் தற்போது சினேகாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படங்களை ரசிகர்கள் அதிகளவு இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.