நடிகை ஸ்ரீ துர்காவின் குடும்பத்தை பார்த்து உள்ளீர்களா?… என்ன ஒரு அழகான குடும்பம் புகைப்படம் இதோ…

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபமான நடிகைகளில் ஒருவர்  ஸ்ரீ துர்கா. இவர் பல வருடங்களாக சின்னத்திரையில்  சீரியலில் நடித்து வருகிறார்.

   

சிறுவயதிலேயே  சினிமா ,சீரியல் என இரண்டிலுமே ஸ்ரீ துர்கா நடித்திருக்கிறார். மாடலிங் துறையில் தன்னுடைய கேரியரை தொடங்கினார்.

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சின்னத்திரை சீரியலில் நடித்துவருகிறார்.பெரும்பாலும் இவர் பாசிட்டிவ் கதாபாத்திரத்தில்  நடித்திருக்கிறார்.

இவர் சன் டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பான உறவுகள், தியாகம், முந்தானை முடிச்சு போன்ற தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதை தொடர்ந்து இவர் கேப்டன் டிவியில் ஒரு சில சீரியல்கள் நடித்திருக்கிறார். ஆன்மிக நிகழ்ச்சி ஒன்றை தயாரித்து வெளியிட்டார்.

எல்லா கதாபாத்திரத்திலும் அமைதியாக ,பொறுமையான கதாபாத்திரத்தில் நடித்த  ஸ்ரீ துர்கா  ஊஞ்சல், அலைகள், சிகரம் போன்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர்’ உறவுகள்’ சீரியலில் கவிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பெற்றார்.

நடிகை ஸ்ரீ  துர்கா ஜெயா டிவியில் ஒளிபரப்பான ‘பொய் சொல்ல போறோம்’ என்ற தொடரில் கொஞ்ச நாட்கள்  காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு கெளதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகும் சீரியலில் நடித்து வந்தார்.

இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘ஆதலால் காதல் செய்வீர்’ என்ற படத்தில் ஹீரோவுக்கு அக்காவாக நடித்திருந்தார்.

நடிகை ஸ்ரீ துர்கா சங்கீதத்தில் மிகவும் ஆர்வம் உள்ளவர். இவர் குடும்பம்  முழுவதும் சங்கீதம் பயின்றவர்கள்.

இவர் சிறு வயதிலிருந்து சங்கீதம் பயின்று வந்துள்ளார். தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது  இணையத்தில் வெளியாகியுள்ளது.