
குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் சமீப காலமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. போக்சோ போன்ற சட்டங்கள் இருக்கத்தான் செய்கிறது. எனினும், கொடூரமான முறையில் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் நெஞ்சை பதற வைக்கிறது.
குழந்தைகள் மட்டுமல்லாமல் அதிகப்படியான பெண்களும் இதில் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் திரை துறையைச் சேர்ந்த நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகள் வெளிப்படையாக பேசப்படுகிறது. அந்த வகையில் ஸ்ருதி என்ற மலையாள நடிகை, தான் ஐந்து வயதில் பாலியல் தொல்லையை எதிர்கொண்டதாக கூறி இருக்கிறார்.
கோவை மாவட்டத்தில் எம் ஏ முடித்துவிட்டு மாடல் அழகியான அவர், மலையாள தொலைக்காட்சியில் சின்னத்திரை தொடர்கள் மூலம் பிரபலமானவர். சமீபத்தில் வெளிவந்த நரைன் மற்றும் மீரா ஜாஸ்மின் நடித்த குயின் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் தான் ஐந்து வயது சிறுமியாக இருந்த போது தன் உறவினர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியிருக்கிறார். அந்த சமயத்தில், எனக்கு பயம் இருந்தது. அவர் என் உறவினர் என்பதால் வெளியில் சொல்லாமல் இருந்தேன் என்று கூறியுள்ளார்.
எனவே, என்னைப்போன்று இருக்காமல் தற்போது இருக்கும் குழந்தைகள் இவ்வாறான தொல்லைகளை எதிர்கொள்ள நேர்ந்தால் பயமில்லாமல் பெற்றோர்களிடம் கூற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த உறவினருக்கு திருமணம் நடந்து பெண் குழந்தை இருக்கிறது. பெண் குழந்தை பிறந்த பிறகு, மன்னிப்பு கேட்டு எனக்கு மெசேஜ் அனுப்பி இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
தற்போது வரை அவர் யார்? என்று நான் காட்டிக் கொடுக்க விரும்பவில்லை. அது மட்டுமல்லாமல் அவருக்கும் பெண் குழந்தை உள்ளதால், அவர் அந்த குற்ற உணர்ச்சியோடு இருப்பதை என்னால் உணர முடிகிறது என்று கூறியிருக்கிறார்.