பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் சுஷ்மிதா சென். இவர் பெங்காலி குடும்பத்தை சேர்ந்தவர். ஹைதராபாத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை இந்திய விமானப்படை கமாண்டர் ஆவார். தாயார் ஒரு பேஷன் கலைஞராகவும், நகை வடிவமைப்பாளராகவும் இருந்தவர்.
ஹைதராபாத்தில் பிறந்த சுஷ்மிதா சென் புதுடில்லியில் வளர்ந்தார். விமானப்படை பொன்விழா கல்வி மையத்தில் கல்வி பயின்றார். பின் மைத்ரேயி கல்லூரியில் பட்டம் பெற்றவர். பிறகு சுஷ்மிதா சென் தன்னுடைய கேரியரை மாடலிங்கில் தொடங்கினார். தன்னுடைய 18 வயதில் அழகி பட்டம் பெற்றவர்.
இதற்கு பிறகு தான் இவர் சினிமா உலகில் நடிக்க ஆரம்பித்தார். இவர் 1996 ஆம் ஆண்டு ‘தஸ்தக்’ படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ரட்சகன்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படம் மிகப் பெரிய அளவிற்கு வெற்றியை பெற்றது.
அதற்கு பிறகு இவருக்கு தமிழில் படங்கள் சரியாக அமையவில்லை என்றவுடன் பாலிவுட் பக்கம் சென்று விட்டார். மேலும், பாலிவுட்டில் நடிகை சுஸ்மிதா சென் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் நடிகை சுஷ்மிதா சென் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், ‘உங்கள் இதயத்தை மகிழ்ச்சியாக வைத்து கொள்ளுங்கள். அது உங்களின் வாழ்க்கைக்கு மிக முக்கியமான ஒன்று. எனக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டது.
எனக்கு பலமான இதயம் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். தற்போது நல்ல செய்தி என்னவென்றால் நான் இப்போது குணமாகியுள்ளேன்’ என்று கூறியுள்ளார். தற்பொழுது இவரது பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இதோ அவரின் வைரல் பதிவு…
View this post on Instagram