‘ஈரமான ரோஜாவே 2’ பிரியாவா இது?… சீரியலில் மட்டும் தான் ஹோம்லி… நிஜத்தில் செம மாடர்ன்… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக இளைஞர்களின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக உள்ளது ‘ஈரமான ரோஜாவே’.

   

இதில் பவித்ரா, நடிகர் திரவியம், சியாம், சாய் காயத்ரி, பிரேமலதா, பிரவீன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது இரண்டாவது பாகம் வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது .

இந்த இரண்டாம் பாகத்தில் சித்தார்த், கேபிரியல்லா, சுவாதி கொண்டே என பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இந்த சீரியலும் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்பொழுது இந்த சீரியலில் பிரியா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை சுவாதி கொண்டே.

இந்த சீரியலின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமாகியுள்ளார். இவர் கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர்.

கன்னட மொழி படத்தின் மூலம்தான் இவர் சினிமா திரையுலகில் கால் பதித்தார். இவர் கன்னட திரைப்படங்களிலும்,  கன்னட சீரியலிலும் நடித்து இருக்கிறார்.

தற்பொழுது ஈரமான ரோஜாவே 2 சீரியலில்  ஜீவா- பிரியாவின் ஜோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அது மட்டுமில்லாமல் பிரியா இன்ஸ்டாகிராமில்  எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள்.

தற்பொழுது இவரின் மாடர்ன் ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.