‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடிகை நந்திதா ஜெனிபரின் கணவர் மற்றும் குழந்தைகளை பார்த்து உள்ளீர்களா?… என்ன ஒரு அழகான புகைப்படம்…

தமிழ் திரையுலகில்  வளர்ந்து வரும் நடிகை  நந்திதா ஜெனிபர். இவர் 2000 ஆம் ஆண்டு அர்ஜுன் நடித்த’ ரிதம்’ படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார் .

   

ஜெனிபர் மிகச்சிறந்த டான்ஸரும் கூட  இவர் பல நிகழ்ச்சிகள் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

சென்னையில் பிறந்து வளர்த்தார்.  தந்தை பழம்பெரும் சினிமா  நடன மாஸ்டராக  இருந்துள்ளார்.

இதை தொடர்ந்து  ‘ஈர நிலம்’  ‘முத்தம்’  படத்தில்  திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இதன் பின்    தமிழில் 23ஆம் புலிகேசி .அறிந்தும் அறியாமலும் போன்ற பல  திரைப்படங்களில்  நடித்துள்ளார்.

இவருக்கு  வெள்ளித் திரையில் வாய்ப்பு குறைந்த நிலையில் தற்போது சீரியலில் பக்கம் திரும்பி உள்ளார்.

‘புவனேஸ்வரி’ ‘நாகவல்லி’ போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் 2019 ஆம் ஆண்டு ‘லட்சுமி ஸ்டோர்’ என்னும் சன் டிவி சீரியலில்  நடித்துள்ளார்.

இவர் கலர்ஸ் தமிழில் ‘அம்மன்’ சீரியலிலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து இவர் விஜய்  டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ராதிகா கதாபாத்திரதில்  நடித்திருந்தார்.

ராதிகா கதாபாத்திரத்திற்கு இவ்வளவு வரவேற்பு இருக்கும் என்று கனவிலும் கூட நினைக்கவில்லை என்று  கூறியுள்ளார்.

துணை ஒழிப்பதிவாளர் காசி விஸ்வநாதன் என்பவரை கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு ஒரு மகனும் உள்ளார்.

இந்த நேரத்தில் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி  என்று கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் கூறி இருந்தார் .

.இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர்.

தற்போது இவர்களின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது.