‘மில்க் பியூட்டி’ நடிகை தமன்னாவின் அம்மா , அப்பாவை பாத்துருக்கீங்களா?… பலரும் பார்த்திடாத அழகிய குடும்ப புகைப்படம் உள்ளே…

தமிழ் சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை தமன்னா. தமிழில் ‘கேடி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். குறுகிய காலகட்டத்திலேயே  விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்பொழுது இவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லை.

   

இதை தொடர்ந்து அவர் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என பிற மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் தமிழில் வெளியான ‘பாகுபலி’ திரைப்படம் மூலம் உலக அளவில் பிரபலமானார். தற்பொழுது இந்தி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை தமன்னா.

தமிழில் இறுதியாக விஷால் நடிப்பில் வெளிவந்த ‘ஆக்சன்’ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் தலை காட்டாமல் இருந்து வந்தார். இவர் தற்பொழுது 4 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும் சுந்தர்.சி இயக்கத்தில் தயாராகி வரும் அரண்மனை 4ல் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஆக்ஷன் திரைப்படத்திற்கு பின் மீண்டும் தற்போது சுந்தர். சி இயக்கத்தில் தமன்னா நடிக்கிறார். இந்நிலையில், நடிகை தமன்னா தனது அம்மா மற்றும் அப்பாவுடன் எடுத்துக் கொண்ட அழகான குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ…