வெள்ளித்திரைக்கு சென்ற பிறகு அசத்தும் அழகும் ஜொலிக்கும் சீரியல் நடிகை வாணி போஜன்… அவரா இது?… வியப்பில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை வாணி போஜன். இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். இதை தொடர்ந்து இவரை ரசிகர்கள் ‘சின்னத்திரை நயன்தாரா’ என்றும் அழைத்து வருகின்றனர். இவர் 2020இல் வெளியான  ‘ஓ மை கடவுளே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார்.

   

இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகை வாணி போஜனுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தற்பொழுது இவர் பகைவனுக்கு அருள்வாய், பாயும் புலி நீ எனக்கு, ஊர்க்குருவி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதை தவிர பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை வாணி போஜன்.

சமீபத்தில் இவர் நடிகர் ஜெய் உடன் ஜோடி சேர்ந்த நடித்து வந்த நிலையில், அவருடன் லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக இணையத்தில் செய்திகள் வெளியாகி வைரலானது. ஆனால் இதற்கு உடனே மறுப்பு தெரிவித்தார் நடிகை வாணி போஜன். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை வாணி போஜன்.

இவர் தற்பொழுது அசத்தும் அழகில் வெளியிட்ட வீடியோ ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘சீரியல் நடிகை வாணி போஜனா இது?’ என்று ஆச்சரியத்தில் வாயை பிளந்து ரசித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Vani Bhojan (@vanibhojan_)