பிரபல நடிகரை வெறித்தனமாக காதலித்த நடிகை வனிதா … இப்படி கூடவா செஞ்சாங்க… பல வருடங்கள் கழித்து வெளியான ரகசியம்…  

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் 1995 இல் வெளியான ‘சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

   

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக விளங்குகின்றார். இவர்  பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக அதிக அளவில் பேசப்பட்டவர். இவர் தொடர்பான எந்த செய்தி வெளிப்பட்டாலும் அந்த செய்தி உடனே வைரலாகி விடுகிறது. தனது சொந்த வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் தன்னுடைய மகள்களை சொந்தக் காலில் நின்று பார்த்துக் கொண்டு வருகிறார்.

தற்பொழுது மீண்டும் திரையுலகில் கால் பதித்து கலக்கி வருகிறார் நடிகை வனிதா. அந்தவகையில் 80’ஸ் முன்னணி நடிகர் மைக் மோஹனுடன் இணைந்து ‘ஹரா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்பொழுது இவர் நடிப்பில் ஜூலை 21 ஆம் தேதி  ‘அநீதி’ திரைப்படம் ரிலீசாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது நடிகை வனிதா தான் பிரபல நடிகர் ஒருவரை காதலித்ததாக பேட்டி ஒன்றில் கூறி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார். அதாவது அவர் அந்த பேட்டியில் கூறியதாவது,   ‘சிறுவயதில் பிரபுதேவாவை தான் வெறித்தனமாக காதலித்ததாகவும்,

காதலன் படம் வந்தபோது தன்னை நக்மாவாக நினைத்துக் கொண்டு கனவில் பிரபுதேவா உடன் டூயட் ஆடியதாகவும் கூறினார். மேலும் அவர் ஒரு  வெஜிடேரியன். வெஜ் உணவுகள் மட்டும் பிடிக்கும் என்பதற்காக தானும் ஒரு வெஜிடேரியனாக சில நாட்கள் இருந்ததாக கூறினார்.