என்னது!. நடிகை வரலட்சுமிக்கு பைக் ஓட்டுறதுனா பயமா?… இப்பதான் பைக் ஓட்ட கத்துக்கிட்டாங்களா?… வைரலாகும் அவரே வெளியிட்ட வீடியோ…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி சரத்குமார். ‘போடா போடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் நாயகி, வில்லி என தனது நடிப்பு திறமையால் தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளார். இதைத் தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சர்கார், இரவின் நிழல் என தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். நடிகை வரலட்சுமி என்றாலே அவர் நடித்த வில்லிகதாபாத்திரம் தான் ரசிகர்களின் நினைவுக்கு வரும். இவர் நடித்த சண்டக்கோழி 2, சர்க்கார் போன்ற பல திரைப்படங்கள் மக்கள் மத்தியில் மிகப் பிரபலம். சினிமாவில் நுழைந்த பொழுது இவர் கொஞ்சம் குண்டாக இருந்தார். தற்பொழுது அதிகம் உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார்.

நடிகை வரலக்ஷ்மி நடிகர் சரத்குமாருக்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்தவர்.இந்நிலையில் சரத்குமார் பிரபல தமிழ் நடிகை ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய வரலட்சுமி சரத்குமார். இவர் தற்பொழுது ஒரு பதிவுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் ‘தனக்கு பைக் ஓட்டுவதற்கு மிகவும் பயம் என்றும், தற்பொழுது அந்த பயத்தை துடைத்தெறிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் சூப்பராக பைக் ஓட்டும் வீடியோவை தற்போது இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த வைரல் வீடியோ….