குடும்பத்துடன் பிறந்த நாளை கொண்டாடிய விஜயலட்சுமி… வெளியான அழகிய புகைப்படங்கள்..

தமிழ் சினிமாவில் சென்னை 28 படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர்தான் விஜயலட்சுமி.

   

இயக்குனர் அகத்தியனின் மகளான இவர் அடுத்தடுத்து அஞ்சாதே, வனயுத்தம் மற்றும் கற்றது கையளவு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

என்னதான் படத்தில் நடித்திருந்தாலும் இவரை பிரபலமாக்கியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

இதற்கு அடுத்தபடியாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்னும் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி கலக்கினார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். இவர் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் இணையத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார்.

அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் விஜயலட்சுமி தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை பற்றி இணையத்தில் சமீபத்தில் ஒரு தகவலை பகிர்ந்திருந்தார்.

சமீபத்தில் கூட தனது கணவர் சொகுசு பைக் ஒன்றை வாங்கியிருந்த நிலையில் அவருடன் அவுட்டிங் சென்ற புகைப்படங்களை வெளியிட்டார்.

இந்நிலையில் விஜயலட்சுமி தனது குடும்பத்துடன் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

அவரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை விஜயலட்சுமி இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.