உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்க் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது. இதனால் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு அலுவலகங்கள், வீடுகள், சாலைகள், கடைகள் என்று பல இடங்களில் மகளிர் தினங்களை வாழ்த்துக்களுடன் பலரும் கொண்டாடி வந்தனர்.
திரைப்பட பிரபலங்கள் பலரும் மகளிர் தின வாழ்த்துக்களை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களை தெரிவித்து இருந்தார்கள். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகைகள் பலரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் உலகில் வாழும் அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
அந்த வகையில் நடிகைகள் தங்களுடைய அழகான புகைப்படங்களை போட்டு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து இருப்பதை ஒரு தொகுப்பாக இங்கு பார்ப்போம்.
நடிகை ஆண்ட்ரியா: தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி தற்போது நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் மகளிர் தினத்தை முன்னிட்டு பின்புறம் முழுவதும் ஆடை எதுவும் இல்லாமல் வித்தியாசமான புகைப்படத்தை வெளியிட்டு மகளிர் தின வாழ்த்து தெரிவித்திருந்தார் .
நடிகை சினேகா: தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்ற படத்துடன் வலம் வரும் இவர் தற்போது சினிமாவை குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களுடன் அழகான புகைப்படத்தை ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார்.
நந்திதா ஸ்வேதா: நடிகை நந்திதா தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தற்போது வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் தொடர்ந்து வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
சமூக பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் வித்தியாசமான புகைப்படத்தை வெளியிட்டு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நடிகை ராசி கண்ணா: தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வரும் ராசி கண்ணா ஒவ்வொரு பெண்ணும் ஒரு வரலாற்றை உருவாக்குகிறார்.
ஒரு பெண் மற்றொரு பெண்ணுக்கு உறுதுணையாக அனைத்து விஷயத்திலும் இருக்கிறார் என்று கூறி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.
நடிகை காஜல் அகர்வால்: பெண்களாகிய நாம் வேலைக்கு அல்லது நம் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றோம், இதனால் பல சமயங்களில் குற்ற உணர்வுடன் இருக்கிறோம்.
ஒரு வழியாக அல்லது வேறு வழி இல்லாமல் இந்த சூழ்நிலைக்கு ஆளாகிறோம். நம் மனதின் விருப்பத்திற்காக இந்த வரம்புகளில் இருந்து வெளியேறி நாம் எடுக்கும் எந்த தேர்வுகளிலும் நம்முடைய பாதத்தை முன்னோக்கி வைப்போம் என்று கூறி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அனுஷ்கா: இவர் தன்னுடைய படத்தின் போஸ்டரை வெளியிட்டு மகளிர் தின வாழ்த்துக்களுடன் அவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நடிகை மிருணாளினி ரவி: டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலம் பிரபலமான இவர் தற்போது சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.
அவர் மாலத்தீவில் எடுத்துக்கொண்ட கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு மகளிர் தின வாழ்த்து தெரிவித்திருந்தார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்: ஒவ்வொரு பெண்ணுக்கும் சிவப்பு நிற நிழல் இருக்கின்றது என கூறி சிவப்பு நிற உடையில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அனைத்து அழகான பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
நடிகை சரண்யா: சீரியல் நடிகையான சரண்யா தன்னுடைய அழகான புகைப்படத்தை வெளியிட்டு அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.