மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவும், ராதா மற்றும் அம்பிகா மூவரும் இவ்வளவு நெருக்கமா?… நீங்கள் இதுவரை பார்த்திடாத UNSEEN புகைப்படம் இதோ…

நடிகை ராதா மற்றும் அம்பிகா இருவருமே 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்கள். நடிகை அம்பிகா தனது 14 வயதில் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கினார். இதை தொடர்ந்து 1979இல் வெளியான ‘சக்காளத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

   

இதை தொடர்ந்து அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் தற்பொழுது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘நாயகி’ தொடரில் நடித்துக் கொண்டு வருகிறார்.

நடிகை அம்பிகாவை தொடர்ந்து திரை உலகில் கால் பதித்தவர் அவரது சகோதரி நடிகை ராதா. இவர் இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான ‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இவரும் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சிவாஜி, சத்யராஜ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர்கள் இருவரும் தற்பொழுது வரை திரையுலகில் பிசியாக வலம் வந்து கொண்டுள்ளனர்.

தமிழக மக்களால் மறக்கவே முடியாத ஒரு பெண்மணி என்றால் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மட்டும்  தான். இவரின் பிறந்தநாள் பிப்ரவரி 24ம் தேதி வந்தது. அரசியல் கட்சியை சார்ந்தவர்களும் சினிமா துறை பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து கூறி இன்ஸ்டாகிராமில் பதிவுகள் வெளியிட்டனர்.

அதில் நடிகை ராதா ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். ராதா மற்றும் அம்பிகா இருவரும் இணைந்து ஜெயலலிதாவுடன் எடுத்துக் கொண்ட நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்டு ‘நமது நாடு எனது நினைவு செய்தாலே அதில் ஜெயலலிதா அம்மா மற்றும் இந்திரா அம்மா தான் நியாபகம் வருவார்கள். மிஸ் யூ அம்மா’ என குறிப்பிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்…