56 வயதாகியும் தற்போது இருக்கும் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும்  நதியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ……

90ஸ் களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை நதியா. இவர் ‘பூவே பூச்சூடவா’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

   

90s களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திரையுலகை வலம் வந்தார். தனது அசாதாரண நடிப்பு திறமையால் ஏராளமான படங்கள் நடித்துள்ளார்.

இவர் தமிழில் பூக்களை பறிக்காதீர்கள், மந்திரப்புன்னகை, உயிரே உனக்காக ,உனக்காகவே  வாழ்கிறேன்,

நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி ,தாமிரபரணி ,மங்கை ஒரு கங்கை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் இயல்பான நடிப்பின் மூலமாக தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

இவர் பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். 90s களில் எந்த பொருளை எடுத்தாலும் இவர் பெயர் சொல்லும் அளவிற்கு மிகவும் பிரபலமாக இருந்தார்.

நதியா வளையல், நதியா புடவை, நதியா கொலுசு, நதியா செருப்பு  என மிகவும் பிரபலமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டவர்.

நடிகை நதியா திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி தனது குடும்பத்தை கவனித்து வந்தார்.

இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘எம் குமரன் சன் ஆப்’ மகாலட்சுமி என்ற படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார்.

இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். தற்போது இவரின் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி  வைரலாகி வருகிறது  .

இதை பார்த்த ரசிகர்கள் 56 வயதாகியும் தற்போது நடிக்கும் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு இளமையாக உள்ளாரே என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்