தமிழ் சினிமாவில் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்து  மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த  நடிகைகள் யார் தெரியுமா?……

தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் பலவிதமான கதாபாத்திரங்களின் குணச்சித்திர வேடங்களிலும்  நடித்துள்ளனர். அப்படி அம்மன் கதாபாத்திரத்தில்  நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற நடிகைகளை பற்றி இதில் காண்போம்.

1.மீனா:

   

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி  நடிகைகளில் ஒருவர் நடிகை மீனா. இவர் கிட்டதட்ட 40 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நடித்து வருகிறார். இவர் ‘முத்து’ படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.இவர் படைவீட்டு அம்மன் மற்றும் பாளையத்தம்மன் போன்ற படங்களில் அம்மனாக  நடித்துள்ளார்.

2.ரம்யா கிருஷ்ணன்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன்.இவருடைய மிகப்பெரிய சிறப்பு எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை அசால்டாக நடித்து கொடுக்கக் கூடியவர். இவர் 80ஸ் மிகவும் பிரபலமான முன்னணி நடிகையாக வலம் வந்தார்.இவர்  ராஜகாளியம்மன், நாகேஸ்வரி, பொட்டு அம்மன், ஸ்ரீ ராஜராஜேஸ்வரி போன்ற படங்களில் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

3.கே ஆர் விஜயா:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கே ஆர் விஜயா. அன்றைய காலகட்டத்தில் சாமி படங்கள் என்றாலே அதற்கு முதல் சாய்ஸ் கே ஆர் விஜயா அவர்கள்தான். அதிலும் கடவுளின் பக்தையாகவும், அதே நேரத்தில் கடவுளின் மறு உருவமாக அம்மனாகவும் காட்சியளித்து பார்ப்பவர்களை வியக்க வைத்திருப்பார். இவருடைய நடிப்பிற்கு தற்போது வரை யாராலும் ஈடு கட்ட முடியாத அளவிற்கு மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்.

4.ரோஜா:

80ஸ் 90ஸ் களில் முன்னணி நடிகையாக வலம்  வந்தவர் நடிகை ரோஜா.அன்றைய காலகட்டத்தில் நடித்த முக்கால்வாசி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.இவர் ‘கோட்டை மாரியம்மன்  படத்தில்அம்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

5.நயன்தாரா:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை நயன்தாரா. இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் அளவிற்கு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர்  ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்து வரவேற்பு பெற்றார்.

6. சௌந்தர்யா:

தமிழ் சினிமாவின்  பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை சௌந்தர்யா. ‘படையப்பா’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இவர் ‘நம்ம ஊரு எல்லையம்மன்’ படத்தின் அம்மனாக நடித்துள்ளார்.

7.அனுஷ்கா:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்  நடிகை அனுஷ்கா. இவர் ‘பஞ்சமுகி’ திரைப்படத்தின் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.