
வைரல் புகைப்படம்
வெவ்வேறு திரையுலகை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் டிரண்டாகி வருகிறது. அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று ரசிகர்களால் சோசியல் மீடியாக்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது. மேலும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 170வது படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டாகியுள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வந்தது.
அட இவரா
இந்த புகைப்படத்தில் இருப்பவர் வேறு யாருமில்லை தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் நாணி தான். இவர் சிறு வயதில் செம க்யூட்டாக போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் நாணி
இவர் தமிழ் சினிமாவில் வெப்பம் படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், ஆஹா கல்யாணம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தசரா படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், இதை தொடர்ந்து அடுத்ததாக Hi Nanna எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.
மேலும் இவர் ரஜினியின் 170வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை.