க்யூட்டான உடையில் பிறந்த நாளை வேற லெவலில் கொண்டாடிய அதிதி சங்கர்… வெளியான அழகிய புகைப்படங்கள்..

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் சங்கர். இவரின் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர்.

   

தற்போது இவர் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இவரின் இளைய மகளான அதிதி சங்கர் கடந்த வருடம் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமானார்.

டாக்டர் படிப்பை முடித்துள்ள இவர் நடிப்பு மேல் அதிக ஆர்வம் கொண்ட காரணத்தால் சினிமாவில் நுழைந்தார்.

 

அதன்படி கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமான அதிதி சங்கர் தனது முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து இவர் தற்போது அதிக அளவு விளம்பர படங்களில் நடித்து வருகின்றார். அதேசமயம் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்திலும் இவர் ஹீரோயினியாக நடித்துள்ளார்.

மருத்துவ படிப்பை முடித்து பட்டம் வாங்கியுள்ள அதிதி சங்கர் டாக்டர் ஆகாமல் அவரின் அப்பாவை போலவே சினிமா பக்கம் திரும்பி விட்டார்.

தன்னுடைய மகளின் ஆசையை நிறைவேற்ற நினைத்த சங்கர் கார்த்தி நடித்த விமல் திரைப்படத்தில் அவரை ஹீரோயினியாக அறிமுகப்படுத்தினார்.

நடிப்பு மற்றும் பாடல் என ஏகப்பட்ட திறமைகளை கொண்டுள்ள அதிதி சங்கர் மொக்கை ஜோக்கு சொல்வதிலும் வல்லவர். திருமண் திரைப்படம் வெற்றி அடைந்த நிலையில் இதனைத் தொடர்ந்து மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.

விருமன் திரைப்படத்தில் கிராமத்து பெண்ணாகமாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்த அதிதி சங்கர் தற்போது மாவீரன் திரைப்படத்தில் பத்திரிக்கையில் வேலை செய்யும் நகரத்து பெண்ணாக நடித்துள்ளார்.

இதனால் இவரின் அடுத்த படத்தை எதிர்நோக்கி அவரின் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அதிதி சங்கர் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அப்போது எடுத்துக் கொண்ட அழகிய போட்டோ சூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தப் புகைப்படத்தில் அதிதி சங்கர் க்யூட்டான லூக்கில் அழகு சிலையாக மாறி உள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

மேலும் இவரின் பிறந்தநாளுக்கு மாளவிகா மோகனன், ராதிகா சரத்குமார் மற்றும் பிக் பாஸ் பிரபலம் அனிதா சம்பத் உள்ளிட்ட பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.