18 ஆண்டுகளுக்குப் பிறகு… அதே டீமாக ஒன்று சேர்ந்த ‘கலக்கப்போவது யாரு’ பிரபலங்கள்… ஒருத்தர் மட்டும் missing… புகைப்படம் வைரல்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று கலக்கப்போவது யாரு. இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர்கள் ஏராளம். அப்படி பிரபலம் அடைந்தவர்களில் ஒருவர் தான் மதுரை முத்து. இவர் ஸ்டாண்ட் அப் காமெடி செய்வதில் வல்லவர்.

   

இதைத்தொடர்ந்து தன்னுடைய பட்டிமன்ற பேச்சால் அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறார். பல நேரங்களில் இவர் பேச்சும் பேசுங்கள் டைமிங் காமெடியாக இருப்பதால் ரசிகர்கள் தங்களுடைய மனக்கவலையை மறந்து வாய்விட்டு சிரித்து வருகிறார்கள்.

இவரது திருமண வாழ்க்கை இணையத்தில் சர்ச்சைக்குள்ளானது. அதாவது காமெடி நடிகரான மதுரை முத்து லேகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 2016ல் கார் விபத்து ஒன்றில் லேகா  உயிரிழந்தார். இவரது மனைவியின் மறைவுக்கு பின்னர் தனது 32 வது வயதில் தனது மனைவியின் தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் மதுரை முத்து. இவர் தற்பொழுது ’18 ஆண்டுகளுக்கு பிறகு அதே டீம்’ என்று கூறி புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் காமெடி நடிகர் குணா அவர்கள் மட்டும் இல்லை. இவர் சமீபத்தில் மரணம் அடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்பொழுது இந்த புகைப்படமானது  இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.