
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான முன்னணி மற்றும் முத்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை தேனி குஞ்சரம்மாள். இவர் 1994 வெளியான ‘கருத்தம்மா’ திரைப்படத்தில் பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொள்ளும் கதாபாத்திரத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.அதை தொடர்ந்து இவர் காதல் சடுகுடு, குஷி, விசில், விருமாண்டி, திருப்பாச்சி, சிவகாசி, தமிழன் படம் ,கிழக்கு மேற்கு, பாரதி கண்ணம்மா, மண்ணுக்கு மரியாதை, புதிய பாதை, அம்மா பொண்ணு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகை குஞ்சுராம்மாள் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் காதல், முத்து, தாஜ்மஹால், சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் பாடியுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா இசையில் விருமாண்டி, ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அருள் போன்ற திரைப்படங்களில் நடிகை குஞ்சரம்மாள் பாடியுள்ளார் .
இன்றைய காலகட்டத்தில் AI நுட்பம் பல்வேறு விஷயங்களில் பயன்பட்டு வருகிறது அதிலும் குறிப்பாக கற்பனையில் நினைக்கும் விஷயங்களை கூட நெட்டிசன்கள் அதில் செய்து வருகின்றன.தற்போது ஏ ஐ தொழில்நுட்பத்தை வைத்து நடிகை குஞ்சரம்மாள் இளம் நடிகை வயதில் இருக்கும் புகைப்படத்தை உருவாக்கியுள்ளனர். தற்போது இந்த புகைப்படமானது இணையத்தில் மிகுந்த வைரலாகி வருகிறது.