
ஆக்சன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் தம்பி ராமையாவின் மகள் உமாபதிக்கும் கெருகம்பாக்கத்தில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஏற்கனவே அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோவிலில் தான் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.
திருமணம் எப்போது நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் நேற்று நல்லபடியாக திருமணமும் நடந்து முடிந்தது.
ஐஸ்வர்யா தமிழில் விஷாலுக்கு ஜோடியாக பட்டத்து யானை என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
அதன் பிறகு தெலுங்கு படத்திலும் ஐஸ்வர்யா நடித்துள்ளார்.
நடிகர் அர்ஜுனும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படத்தில் கடைசியாக நடித்தார்.
அர்ஜுன் சின்னத்திரையில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
அப்போது அர்ஜுனனை பார்க்க வந்த ஐஸ்வர்யாவுக்கும் அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட உமாபதிக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.
பின்னர் இருவரும் காதலித்தனர். இந்த திருமணத்தில் விஷால், விஜயகுமார், கே.எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் திருமணம் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் புதுமண தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.