ஒரு சில படங்களில் மட்டும் நடித்து…..  கோடீஸ்வரியாக வாழும் அஜித்தின் மனைவி…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் ஷாலினி .இவர் பேபி ஷாலினியாக குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில்  அறிமுகமானார். இவரது மூன்று வயதில் இருந்தே நடிக்க தொடங்கினார். விடுதலை, ராஜா சின்ன ரோஜா, பந்தம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.இதை தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் 25 மேற்பட்ட திரைப்படங்கள் நடித்துள்ளார் நடிகை ஷாலினி .

   

இவர் தமிழில்  கதாநாயகியாக காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும், என பல படங்கள் நடித்துள்ளார்.இவர் தமிழ், மலையாளம் போன்ற பல  மொழி படங்களில் நடித்து உச்சத்தை எட்டினார் ஷாலினி. ‘அமர்களம்’ படத்தில் நடித்தபோது தான் அஜித்துக்கும் ஷாலினிக்கும் இடையே காதல் மலர்ந்தது.

நடிகர் அஜித்தை நடிகை ஷாலினி 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு  ஒரு மகளும் இவருக்கு ஒரு மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி தன் குடும்பத்தை மட்டும் கவனித்து வருகிறார். இந்நிலையில் 43 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் நடிகை ஷாலினி. தற்போது இவருக்கு இவரது ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

நடிகை ஷாலினிக்கு சொந்தமாக ரூபாய் 50 கோடி சொத்துக்கள் உள்ளதாம் .தற்போது கோடி கோடியாய் சம்பளம் கொடுத்தாலும் சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்பதில்  தீர்மானமாக உள்ளார். நடிகை ஷாலினி  கடைசியாக தமிழ் சினிமாவில் நடித்த போது வாங்கிய  சம்பளம் ரூ. 50 லட்சம் . தற்போது  இந்த செய்தியானது இணையத்தில் வெளியாகியவைகள் ஆகி வருகிறது