இளைஞரிடம் பணமோசடி… அமலா ஷாஜி மீது பரபரப்பு புகார்…. வைரலாகும் இளைஞரின் பேட்டி….!

இணையதளங்கள் மூலம் ரீல்ஸ் செய்து மக்களிடையே பிரபலமடைபவர்கள், அதன் மூலம் திரையுலகில் வாய்ப்பு கிடைத்து நடிக்க தொடங்கிவிடுகிறார்கள். அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து பிரபலமான அமலா ஷாஜி, சில திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

   

அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் அவரை நான்கு மில்லியனுக்கும் அதிகமானோர் பின் தொடர்கிறார்கள். இந்நிலையில், ஐடி துறையில்  பணியாற்றும் ஒரு ஊழியர், அமலா சாஜி மீது மோசடி புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, 15 ஆயிரம் ரூபாய் தந்தால் அதனை ஒரு மணி நேரத்தில் 55 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து தருகிறேன் என்று கூறி மோசடி செய்ததாக அந்த இளைஞர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இதனை விக்னேஷ் முத்துக்குமார் என்ற வக்கீல் தன் யூடியூப் சேனலில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

பணத்தை பெற்றுக் கொண்ட பிறகு, அமலா சாஜி எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் தொழில்நுட்ப கோளாறு என்று தன்னிடம் பணத்தை வாங்குவதற்கு பார்த்தார் என்றும் அந்த இளைஞர் தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.