பாலில் செஞ்ச பால்கோவா மாறி இருக்கீங்க…. தொகுப்பாளினி DD வெளியிட்டுள்ள போட்டோஸ்… உருகும் ரசிகர்கள்…

மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற டிவியில் விஜய் டிவியும் ஒன்று. இந்த விஜய் டிவியில் பல ஆங்கர்கள் இருக்கிறார்கள். அதில் சிலர் மட்டுமே ரசிகர்களின் மனதில் நீங்காத வண்ணம் இடம் பிடித்து விடுவார்கள். இதில் முக்கியமானவர் DD என்கின்ற திவ்ய தர்ஷினி.

   

காஃபி வித் DD என்ற நிகழ்ச்சியில் பிரபலங்களை பேட்டியெடுத்து ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார் இந்த திவ்ய தர்ஷினி. பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கும் பிடித்த ஆங்கராக DD இருக்கிறார்.

மேலும், பல வருட நண்பரை திருமணம் செய்து கொண்டாலும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்த தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி அதன்பின் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

அதுமட்டுமில்லாமல், பவர் பாண்டி, துருவ நட்சத்திரம், காபி வித் காதல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார் தொகுப்பாளினியாக திவ்ய தர்ஷினி.

மேலும், சமூகவலைத்தள பக்கங்களில் ஆக்ட்டிவாக வளம் வருகிறார் தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி. அதோடு, ரசிகர்களை கவர்வதற்காக அவ்வப்போது தனது புகைப்படங்களையும் DD வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது நீளமான டிரஸ் ஒன்றில் வித விதமாக போஸ் கொடுத்து சில அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஆங்கர் திவ்ய தர்ஷினி அவர்கள்.