
நடிகை அஞ்சலி இயக்குனர் ராம் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் வருடத்தில் வெளிவந்த கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அங்காடி தெரு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.
அதன் பிறகு, தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. அதனைத்தொடர்ந்து நடிகர் ஜெய்யை அவர் காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றும் தகவல் பரவி வந்தது.
இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்களும் இணையதளங்களில் வைரலானது. ஆனால் திடீரென்று இருவரும் பிரிந்து விட்டனர். நீண்ட நாட்களாக அஞ்சலி திரைப்படங்களில் தலைகாட்டாமல் இருந்தார். எப்போதாவது அவர் குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும்.
அந்த வகையில் சமீபத்தில் தொழிலதிபர் ஒருவரை அவர் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் என்றும் செய்திகள் பரவி வந்தது. கடைசியாக அஞ்சலி அதற்கு விளக்கமளித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில், அஞ்சலி குறித்து மீண்டும் ஒரு தகவல் வெளி வந்திருக்கிறது.
அதாவது, தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரை அவர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்பட்டிருக்கிறது. எனினும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரவில்லை. ஆனால், அந்த தயாரிப்பாளர் விவாகரத்து பெற்றவர் என்று கூறப்பட்டிருக்கிறது.