நம்ம சிவாஜி பட அங்கவை சங்கவையா இது…? ஹீரோயின் மாறி இருக்காங்கப்பா… பாத்தா வாயடைச்சி போயிருவீங்க…!

சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து, கடந்த 2007 ஆம் வருடத்தில் வெளியான சிவாஜி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள், ரஜினிகாந்த் பேசும் வசனங்கள், மறைந்த நகைச்சுவை நடிகர் சின்னக்கலைவாணர் விவேக் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் என்று அனைத்துமே பெரிய அளவில் ரசிக்கும் படி இருந்தது.

   

அத்திரைப்படம், தற்போது வரை ரசிகர்களின் விருப்பமானதாக அமைந்திருக்கிறது. அதில், ஒரு நகைச்சுவை காட்சியில் சாலமன் பாப்பையா, தன் இரண்டு மகள்களை அழைத்து வந்து இது அங்கவை, இது சங்கவை என்று ரஜினிகாந்திடம் அறிமுகப்படுத்துவார். அதற்கு விவேக், இத எங்க வைக்க வேண்டும்? என்று கேட்பார்.

அந்த காட்சி ரசிகர்களை அதிக அளவில் ஈர்த்தது. இந்நிலையில், அத்திரைப்படத்தில் அங்கவை சங்கவையாக நடித்திருந்த இரட்டை சகோதரிகளின், தற்போதைய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.