முத்த காட்சி பொது மேடையில் வைத்து டாராக கிழிச்ச ரசிகர்கள் கண்ணீருடன் நடையை கட்டிய அனுபாமா..

இயக்குனர் ஆர்.எஸ். துரை செந்தில் குமார் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் ‘கொடி’. இப்படத்தில் தனுஷ், அனுபாமா பரமேஸ்வரன்,  திரிஷா,  நமோ நாராயணன்,  சரண்யா பொன்வன்னன்,காளி வெங்கட் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்  நடிகை அனுபாமா பரமேஸ்வரன்.

   

இவர்  2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார். இவர் ,குரூப்,  ரவுடி பாய்ஸ்,  தள்ளி போகாதே  கார்த்திகேயா 2,  18 பக்கங்கள்,  பட்டாம்பூச்சி போன்ற பல படங்களில்  நடித்துள்ளார். நடிகையான அனுபமா பரமேஸ்வரன் ‘டில்லு ஸ்க்வேயர்’ என்ற தெலுங்கு படத்தில் முத்தக்காட்சியில் நடித்ததை பலரும் பல விதமாக  விமர்சித்தனர்.

அதற்கு பதிலாக கோபமடைந்த அனுபமா, முத்தக்காட்சியில் நடிக்கமாட்டேன். கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று நான் சொன்னது எனது 18 வயதில். ஆனால்  எனக்கு சினிமா பற்றி இப்போது தான் தெரிய வந்துள்ளது. கதைக்கு தேவையென்றால் அதுபோன்ற காட்சிகளில் நடிப்பது தவறு இல்லை என்று தெரிவித்திருந்தார்.இந்நிலையில், ஐதராபாத்தில் ஜூனியர் என்.டி.ஆரை அழைத்து படத்தின் வெற்றி விழாவை படக்குழு நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் அனுபமா கலந்துகொண்டார்.அப்போது  அனுபமா மேடைக்கு சென்று பேச ஆரம்பித்தார். ஆனால் ரசிகர்கள் அவரை பேச வேண்டாம் என்று கூச்சலிட்டனர். இதனால் அனுபமா, பேசலாமா? வேண்டாமா? என்று கேட்டார்.அதற்கு ரசிகர்கள் வேண்டாம் என்று கூச்சல் போட்டனர்.இதனால் வருத்தமடைந்த அனுபமா சரி போய் விடுகிறேன் என்று சொல்லி சிலருக்கு நன்றி கூறி விட்டு சோகத்தில் திரும்பி சென்றார். தற்போது இந்த  வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .